ரம்ஜான் பண்டிகை: ஆடுகள் விற்பனை அமோகம்
ரம்ஜான் பண்டிகையையொட்டி ஆடுகள் விற்பனை சூடுபிடித்துள்ளது.;
சென்னை,
ரம்ஜான் பண்டிகை வருகிற 31-ம் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கால்நடை சந்தைகளில் ஆடுகளின் விற்பனை சூடுபிடித்துள்ளது. குறைந்தபட்சம் ரூ.5,000 முதல் அதிகபட்சம் ரூ.40,000 வரை ஆடுகள் விற்கப்படுகின்றன.
இந்த நிலையில், ரம்ஜான் பண்டிகையையொட்டி பெரம்பலூர், கிருஷ்ணகிரி, வள்ளியூர், திருமங்கலம், செஞ்சி, புதுக்கோட்டை, வேப்பூர் ஆகிய ஆட்டுச் சந்தைகளில் இன்று ஆடுகள் விற்பனை அமோகம் அடைந்துள்ளது. பல கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக கிருஷ்ணகிரி சந்தையில் இன்று மட்டும் சுமார் ரூ.10 கோடி வரை ஆடுகள் விற்பனை நடந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.