எழும்பூர் ரெயில் நிலையத்தில் சீரமைப்பு பணி : 5 முக்கிய ரெயில்களின் சேவை மாற்றம்
சீரமைப்பு பணி காரணமாக சில ரெயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படவுள்ளன.;
சென்னை,
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைமேடை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் காரணமாக ஏற்கனவே சில ரெயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகிறது. இந்த நிலையில் சீரமைப்பு பணிகள் காரணமாக, அங்கு இயங்கி வந்த சில முக்கிய விரைவுரெயில்கள் தற்காலிகமாக தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளன. செப்டம்பர் 10 முதல் நவம்பர் 10, 2025 வரை இந்த மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக மொத்தம் 5 முக்கிய ரெயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படவுள்ளன:
வழக்கமாக எழும்பூர் வரை செல்லும் இந்த ரெயில், இப்போது தாம்பரம் வரை மட்டுமே செல்லும். அதேபோல், எழும்பூரில் இருந்து செல்லும் ரெயில் தாம்பரத்தில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை – சென்னை: பாண்டியன் எக்ஸ்பிரஸ் (12637/12638)
பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில், தற்காலிகமாக எழும்பூரில் அல்லாமல் தாம்பரத்தில் நிறுத்தப்படும். மதுரையில் இருந்து புறப்படும் ரெயிலும் நேரடியாக தாம்பரத்தை அடையும்.
திருச்சி – சென்னை: சோழன் எக்ஸ்பிரஸ் (22675/22676 )
தினசரி சேவையாக இயங்கும் இந்த ரெயில், எழும்பூர் நிலையத்தை தவிர்த்து, தாம்பரத்தில் இருந்து புறப்படும்.
ராமேஸ்வரம் – சென்னை: சேது எக்ஸ்பிரஸ் (22661/22662)
இந்த ரெயில் தற்காலிகமாக தாம்பரம் வரை மட்டுமே சென்றடையும். ராமேஸ்வரத்திலிருந்து புறப்படும் ரெயிலும் தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படும்.
ராமேஸ்வரம் – சென்னை: ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (16751/16752)
இந்த ரெயில் தற்காலிகமாக தாம்பரம் வரை மட்டுமே சென்றடையும். ராமேஸ்வரத்திலிருந்து புறப்படும் ரெயிலும் தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படும்.
மேலும், சென்னை எழும்பூரிலிருந்து மும்பை நோக்கிச் செல்லும் விரைவு ரெயில், சென்னை கடற்கரை நிலையத்திலிருந்து இயங்கும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.