ரிதன்யா தற்கொலை வழக்கு: கைதான மூன்று பேருக்கும் நிபந்தனை ஜாமீன்

ரிதன்யா தற்கொலை வழக்கில் அவரது கணவர், மாமனார் மற்றும் மாமியார் மூவருக்கும் சென்னை ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.;

Update:2025-08-21 18:32 IST

சென்னை,

திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகேயுள்ள கைகாட்டிபுதூரைச் சோ்ந்தவா் அண்ணாதுரை மகள் ரிதன்யா (27). இவா் திருமணமாகி 78-ஆவது நாளில் வரதட்சணைக் கொடுமையால் ஆடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டாா். ரிதன்யா தற்கொலை சம்பவம் தமிழ்நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கணவா் கவின்குமாா், மாமனாா் ஈஸ்வரமூா்த்தி, மாமியாா் சித்ரா தேவி ஆகியோா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

இந்த நிலையில், கணவர், மாமனார், மாமியார் தங்களுக்கு ஜாமீன் கேட்டு   சென்னை ஐகோர்ட்டில்  மனு தாக்கல் செய்திருந்தனர்..இதனை விசாரித்த  ஐகோர்ட்டு, கணவர், கணவா் கவின்குமாா், மாமனாா் ஈஸ்வரமூா்த்தி, மாமியாா் சித்ரா தேவி ஆகியோருக்கு இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

அதன்படி மூவரும் காலை, மாலை போலீசில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே ஆர்டிஓ விசாரணை நடத்தப்பட்டுள்ளது. முக்கிய சாட்சிகளிடம் விசாரணையும் முடிவடைந்து விட்டது என்பதால் மனுதாரர்களை சிறையில் வைத்திருக்க அவசியம் இல்லை எனக் கூறி மூவருக்கும் ஜாமீன் வழங்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்