‘தமிழ்நாட்டில் ஒருபோதும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. காலூன்ற முடியாது’ - செல்வப்பெருந்தகை

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு எந்த விதமான பின்னடைவும் இருக்காது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.;

Update:2025-11-24 13:02 IST

சென்னை,

பிகார் தேர்தலில் காங்கிரஸ் அடைந்த தோல்வியால், தமிழக காங்கிரஸ் கட்சிக்கு எந்த பின்னடைவும் இருக்காது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நம்பிக்கை தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது;-

“பிகார் தேர்தல் முடிவுகளால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு எந்த விதமான பின்னடைவும் இருக்காது. அது வட இந்தியா, இது தென்னிந்தியா. அது பீகார், இது தமிழ்நாடு. இரண்டிற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.

Advertising
Advertising

பீகாரில் பா.ஜ.க. மற்றும் ஜே.டி.யு. ஏற்கனவே ஆளுங்கட்சியாக இருந்திருக்கின்றன. ஆனால் தமிழ்நாட்டில் ஒருபோதும் பா.ஜ.க. ஆளுங்கட்சியாக இருந்ததில்லை. தமிழ்நாட்டில் ஒருபோதும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. காலூன்ற முடியாது. அதற்கு வாய்ப்பு கிடையாது.”

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Full View
Tags:    

மேலும் செய்திகள்