வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கான ஊதியம் ரூ.6,000-ல் இருந்து ரூ.12,000-ஆக உயர்வு

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான ஊக்கத்தொகை ரூ.1000-லிருந்து ரூ.2000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.;

Update:2025-11-19 10:05 IST

சென்னை,

தமிழ்நாட்டில் கடந்த  4 ஆம் தேதி முதல் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் வருகின்ற டிசம்பர் 4 ஆம் தேதியுடன் முடிவடைகின்றன. இந்நிலையில் வாக்காளர் படிவங்களைப் பூர்த்தி செய்ய பொதுமக்களுக்கு உதவும் வகையில், சென்னை மாநகராட்சியில் நேற்று முதல் வாக்காளர் உதவி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. நவம்பர் 25 ஆம் தேதி வரை இந்த உதவி மையங்கள் செயல்படும்.

இந்நிலையில் பணி நெருக்கடி காரணமாக, வாக்காளர் திருத்தப் பணிகளை நேற்று முதல் வருவாய் துறை சங்கம் புறக்கணித்தது. பணிக்கு வராத ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட மாட்டாது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் ஊதியத்தை இரண்டு மடங்காக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பானை வெளியிட்டுள்ளது.

Advertising
Advertising

 பணி நெருக்கடி காரணமாக சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகளைப் புறக்கணிப்பதாக வருவாய் துறை சங்கம் நேற்று முன்தினம் அறிவித்தது. இதன்படி நேற்று பல ஊழியர்கள் வேலைக்கு வரவில்லை. இதனை சமாளிக்கும் விதமாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான ஊக்கத்தொகை ரூ.1000-லிருந்து ரூ.2000 ஆகவும்,  வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கான ஊதியம் ரூ.6,000-ல் இருந்து ரூ.12,000-ஆகவும்,வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்களுக்கான ஊதியம்  ரூ.12,000-லிருந்து ரூ.18,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.  தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாடு அரசு   இதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்