ஷூவில் இருந்த பாம்பு கடித்து பள்ளி மாணவன் மருத்துவமனையில் அனுமதி

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;

Update:2025-08-25 15:58 IST

கடலூர் திட்டக்குடி அருகே தொழுவூரில் ஷூவில் இருந்த பாம்பு கடித்த நிலையில் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொழுதூர் வ.உ.சி. நகரை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவன் கவுசிக் பள்ளிக்கு புறப்படும்போது வீட்டின் வெளியே இருந்த ஷூவை அணிவித்தபோது அதில் இருந்த பாம்பு கடித்தது.

பாம்பு கடித்ததில் மயக்கம் அடைந்த சிறுவனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்