சாலையில் நடந்து சென்ற பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது

போக்சோ வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2026-01-22 07:58 IST

விருதுநகர்,

விருதுநகர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சிறப்பு வகுப்பு முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மாரீஸ்வரன் (24) என்பவர் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ வழக்கில் மாரீஸ்வரனை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்