வேடிக்கை காட்ட வரும் சிங்கம்... விஜய் மீது சீமான் விமர்சனம்

தளபதி 2026 அரசியல் பிரசார பயணம்' என்ற பெயரில் தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.;

Update:2025-09-11 15:08 IST

சென்னை,

2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாக தயாராகி வருகிறது. அக்கட்சியின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்ய உள்ளார். இதன்படி வரும் 13-ந்தேதி தனது முதற்கட்ட அரசியல் சுற்றுப்பயண பிரசாரத்தை திருச்சியில் இருந்து தொடங்க இருக்கிறார். திருச்சி சத்திரம் பகுதியில் தொடங்கி அரியலூர், குன்னம் பெரம்பலூர் பகுதிகளிலும் பிரசார பயணத்தை விஜய் மேற்கொள்ள உள்ளார். 'தளபதி 2026 அரசியல் பிரசார பயணம்' என்ற பெயரில் தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.

இந்த நிலையில் விஜய் சுற்றுப்பயணம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது,

ரோடு ஷோ, கூட்டு ஷோ என கை காட்டி செல்வது மக்கள் சந்திப்பு கிடையாது.மக்கள் பிரச்னைக்காக, மக்களுடன் நேரடியாக சென்று நிற்பதுதான் உண்மையான மக்கள் சந்திப்பு.இது வேட்டையாட வரும் சிங்கம் அல்ல.வேடிக்கை காட்ட வரும் சிங்கம். என தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்