சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் போக்சோவில் கைது

எண்ணூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.;

Update:2025-05-28 08:53 IST

கோப்புப்படம் 

சென்னை அடுத்த செங்குன்றம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்தாண்டு கோடை விடுமுறையில் எண்ணூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சிறுமி சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த நரேஷ் (21 வயது) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நரேஷ் ஆசைவார்த்தை கூறி சிறுமிக்கு பலமுறை பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார்.

இந்த நிலையில் சிறுமி கடந்த மாதம் கோடை விடுமுறைக்காக எண்ணூருக்கு சென்றபோதும் இது தொடர்ந்துள்ளது. இது குறித்து சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் அம்பத்தூர் மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நரேசை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்