அரசு விடுதி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை - வார்டன் போக்சோவில் கைது

அரசு விடுதி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வார்டன் கைது செய்யப்பட்டார்.;

Update:2025-11-16 03:06 IST

கோப்புப்படம் 

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில், தாராபுரம் சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் பின்புறத்தில் உள்ள பாரதியார் நகரில், அரசு சமூகநீதி மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் காப்பாளராக கள்ளக்குறிச்சியை சேர்ந்த அரவிந்த் (24 வயது) என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தார். அரவிந்த் காங்கயத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எட். படித்து வருகிறார்.

இந்த நிலையில், காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. இதில் திருப்பூர் சைல்டு லைன் அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு மருத்துவ முகாமை நடத்தினர். அப்போது அதிகாரிகளிடம் அந்த விடுதியை சேர்ந்த மாணவர்கள், தங்கள் விடுதியில் தங்கியுள்ள கல்லூரி மாணவர் அரவிந்த் மீது பாலியல் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து நேற்று திருப்பூர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் வளர்மதி மற்றும் காங்கயம் அனைத்து மகளிர் நிலைய போலீசார் மாணவர் விடுதிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

Advertising
Advertising

இதையடுத்து கல்லூரி மாணவர் அரவிந்தை காங்கேயம் அனைத்து மகளிர் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது அவர் விடுதியில் தங்கியுள்ள பள்ளி மாணவர்களிடம் ஆபாச வீடியோக்களை காட்டியதும், ஆடையின்றி குளிக்க வற்புறுத்தியதும், 8 மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரிய வந்தது. இதுதொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவர் அரவிந்தை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்