தஞ்சை அருகே அதிர்ச்சி.. குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்த சோகம்
திருவேங்கட உடையான்பட்டி பகுதியில் உள்ள குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.;
தஞ்சாவூர், திருவேங்கட உடையான்பட்டி பகுதியில் உள்ள குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளத்தில் மூழ்கி உயிரிழந்ததாக 8ம் வகுப்பு மாணவன் ஜஸ்வந்த், 5ம் வகுப்பு மாணவர்கள் பாலமுருகன், மாதவன் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
முன்னதாக பள்ளியிலிருந்து வெகுநேரமாகியும் திரும்பாத சிறுவர்களை பெற்றோர் தேடியபொழுது நீரில் மூழ்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.