நெல்லை மாநகர போலீஸ் அதிகாரிகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி
சேரன்மகாதேவியில் நடந்த மாதாந்திர துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் நெல்லை மாநகர போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டு இலக்கை நோக்கி குறி பார்த்து சுடும் பயிற்சி பெற்றனர்.;
திருநெல்வேலி மாநகர போலீஸ் அதிகாரிகளுக்கான வருடாந்திர துப்பாக்கி சுடுதல் பயிற்சி நேற்று (14.5.2025) திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி துப்பாக்கி சுடுதளத்தில் வைத்து நடைபெற்றது. இதில் நெல்லை மாநகர போலீஸ் உதவி கமிஷனர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டு இலக்கை நோக்கி குறி பார்த்து சுடும் பயிற்சி பெற்றனர்.