சிவகங்கை: கல்குவாரியில் கற்கள் சரிந்து 5 பேர் உயிரிழப்பு

எதிர்பாராதவிதமாக மணல் மற்றும் கற்கள் சரிந்து தொழிலாளர்கள் மேல் விழுந்தது.;

Update:2025-05-20 13:46 IST

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு தொழிலாளர்கள் வழக்கம்போல இன்று வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக மணல் மற்றும் கற்கள் சரிந்து தொழிலாளர்கள் மேல் விழுந்தது. இதில் பலர் சிக்கிக்கொண்டனர்.

இந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்