இலங்கைக்கு கடத்தலா? கூடங்குளத்தில் பீடி இலை, சுக்கு பறிமுதல்; 2 பேர் கைது
வள்ளத்தில் இருந்த கூத்தங்குழி மற்றும் கன்னியாகுமரியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.;
நெல்லை,
நெல்லை கூடங்குளம் கடலோர பகுதியில் கடலில் நின்று கொண்டிருந்த சந்தேகத்துக்கிடமான வள்ளம் ஒன்றை போலீசார் சோதனையிட்டனர்.
இதில் 30 கிலோ பீடி இலை பண்டல்கள் மற்றும் 25 கிலோ சுக்கு மூட்டை பறிமுதல் செய்யப்பட்டது. வள்ளத்தில் இருந்த கூத்தங்குழி மற்றும் கன்னியாகுமரியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். இந்த பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்பட இருந்ததா? என சுங்கத்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.