சேலம் வழியாக மைசூரு-காரைக்குடி இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் மைசூரு-காரைக்குடி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.;
சேலம்,
ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரெயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் மைசூரு-காரைக்குடி இடையே வாரம் 2 முறை இயங்கும் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி மைசூரு-காரைக்குடி இடையே வாரம் 2 முறை இயங்கும் சிறப்பு ரெயில் வண்டி எண் (06243) வருகிற 18-ந் தேதி முதல் நவம்பர் 29-ந் தேதி வரை வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் மைசூரு ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 9.20 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு கண்டோன்மென்ட், கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை வழியாக மறுநாள் காலை 5 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 5.10 மணிக்கு புறப்பட்டு நாமக்கல், கரூர், திருச்சி வழியாக காலை 11 மணிக்கு காரைக்குடி சென்றடையும்.
இதேபோல் மறு மார்க்கத்தில் காரைக்குடி-மைசூரு வாரத்தில் 2 முறை இயங்கும் சிறப்பு ரெயில் வண்டி எண் (06244) வருகிற 19-ந் தேதி முதல் நவம்பர் 30-ந் தேதி வரை வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காரைக்குடி ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு நாமக்கல் வழியாக நள்ளிரவு 12.05 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 12.15 மணிக்கு புறப்பட்டு பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக காலை 7.45 மணிக்கு மைசூரு சென்றடையும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.