தாம்பரம்-செங்கோட்டை இடையே இன்று சிறப்பு ரெயில் இயக்கம்
குடியரசு தின விடுமுறையை முன்னிட்டு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.;
திருச்சி,
குடியரசு தின விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தாம்பரம்-செங்கோட்டை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. வண்டி எண் 06137/06138 தாம்பரம்-செங்கோட்டை சிறப்பு ரெயில் இன்று (சனிக்கிழமை) இரவு 11.50 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.40 மணிக்கு செங்கோட்டையை சென்றடையும்.
இதே ரெயில் மறுமார்க்கத்தில் வண்டி எண் 06138 செங்கோட்டை-தாம்பரம் சிறப்பு ரெயில் 26-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 3 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு 27-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும். இந்த ரெயில் செங்கல்பட்டு, விருத்தாசலம், அரியலூர், திருச்சி, மதுரை, விருதுநகர், ராஜபாளையம், கடையநல்லூர், தென்காசி ஆகிய வழித்தடங்கள் வழியாக செல்லும். இந்த தகவலை திருச்சி ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.