இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 24-01-2026
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
மகளிர் பிரீமியர் லீக்: டெல்லி அணியில் 2 வீராங்கனைகள் விலகல்
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இரண்டு வீராங்கனைகள் காயத்தால் விலகியுள்ளனர். இதன்படி தியா யாதவ், விக்கெட் கீப்பர் மமதா மதிவாலா ஆகியோர் காயத்தால் விலகி உள்ளனர்.
‘கில்லி’ சாதனையை ஓவர்டேக் செய்த ‘மங்காத்தா’- அஜித் ரசிகர்கள் உற்சாகம்
ரீ ரிலீஸ் செய்யப்பட்ட மங்காத்தா படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சாதனை மேல் சாதனை படைப்பதுதான் திராவிட மாடல் அரசு - மு.க.ஸ்டாலின் பெருமிதம்
திராவிட மாடல் அரசின் சாதனைகளால் தமிழகம் தலைநிமிர்ந்துள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
ராயபுரம் மற்றும் தீவுத்திடலில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் பேருந்து முனையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது.
கேரள சட்டமன்ற தேர்தலில் நடிகை பாவனா போட்டியா?
கேரள சட்டமன்றத் தேர்தலில் நடிகை பாவனா களம் இறங்கப்போவதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி உள்ளன.
சட்டசபையில் மு.க.ஸ்டாலின் பதிலுரை: அ.தி.மு.க. புறக்கணிப்பு
இன்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பதிலுரை இடம் பெற்றது. ஆனால், முதல்-அமைச்சரின் உரையை பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. புறக்கணித்தது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அ.தி.மு.க. உறுப்பினர்கள் யாரும் இன்று அவைக்கு வரவில்லை.
16 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம்: அமேசான் நிறுவனம் முடிவால் அதிர்ச்சி
அமேசான் நிறுவனம் தனது நிர்வாகச் செலவுகளைக் குறைக்க மேலும் 16,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளது.
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3¾ கோடி
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து, ஏழுமலையானை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். அந்த வகையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 64 ஆயிரத்து 571 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: தேசிய நெடுஞ்சாலைகள் மூடல்
காஷ்மீரின் பல்வேறு இடங்களில் கடும் பனிப்பொழிவால் பனிக்கட்டிகள் மலைபோல் குவிந்துள்ளன.
எழும்பூர்-புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
பயணிகளின் கோரிக்கையை ஏற்று புதுச்சேரி-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் முண்டியம்பாக்கத்திலும், எழும்பூர்-புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரெயில் ஒலக்கூரிலும் நாளை மறுநாள்(திங்கட்கிழமை) முதல் நின்று செல்லும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.