வேளச்சேரி-சென்னை கடற்கரை இடையே சிறப்பு ரெயில் சேவை

பொங்கல் முடிந்து சென்னை திரும்புபவர்கள் வசதிக்காக சிறப்பு பறக்கும் ரெயில் இயக்கப்பட உள்ளது.;

Update:2026-01-17 09:20 IST

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் பொதுமக்களால் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக வேளச்சேரியில் இருந்து சென்னை கடற்கரைக்கு சிறப்பு பறக்கும் ரெயில்கள் இயக்கப்பட இருக்கிறது.

அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து இன்று (சனிக்கிழமை) மதியம் 2.50 மாலை 4.55, 6.50 மணிக்கு வேளச்சேரிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அதே போல, வேளச்சேரியில் இருந்து மதியம் 1.30 மாலை 4, 5.45 மணிக்கு சென்னை கடற்கரைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்