ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு
ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சென்னை சென்டிரல்-கண்ணூர், பெங்களூரு-கண்ணூர் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.;
சென்னை,
ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சென்னை சென்டிரல்-கண்ணூர், பெங்களூரு-கண்ணூர் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை சென்டிரலில் இருந்து நாளை(வியாழக்கிழமை) இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு கேரள மாநிலம் கண்ணூர் செல்லும் ஒரு வழி சிறப்பு ரெயில்(வண்டி எண்.06009), மறுநாள் மதியம் 2 மணிக்கு கண்ணூர் சென்றடையும்.
இதேபோல, கண்ணூரில் இருந்து வரும் 29-ந்தேதி இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு செல்லும் சிறப்பு ரெயில்(06125), போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக மறுநாள் காலை 11 மணிக்கு பெங்களூரு சென்றடையும். மறுமார்க்கமாக, பெங்களூருவில் இருந்து வரும் 30-ந்தேதி இரவு 7 மணிக்கு புறப்பட்டு கண்ணூர் செல்லும் சிறப்பு ரெயில்(06126), இதே வழித்தடம் வழியாக மறுநாள் காலை 7.15 மணிக்கு கண்ணூர் சென்றடையும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.