சார்லபள்ளி - திருவாரூர் இடையே சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

தெலுங்கானா மாநிலம் சார்லபள்ளியில் இருந்து திருவாரூருக்கு சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.;

Update:2025-08-22 14:01 IST

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தெலுங்கானா மாநிலம் சார்லபள்ளியில் இருந்து திருவாரூருக்கு வரும் 27 (புதன்கிழமை) மற்றும் செப்டம்பர் 8-ந் தேதிகளில் (திங்கட்கிழமை) சிறப்பு ரெயில்கள் (வண்டி எண் 07091) காலை 8.10 மணிக்கு இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரெயில்கள் மறுநாள் காலை 10.30 மணிக்கு திருவாரூரை வந்தடைகிறது.

மறுமார்க்கத்தில், திருவாரூரில் இருந்து சார்லபள்ளிக்கு வரும் 28 (வியாழக்கிழமை) மற்றும் செப்டம்பர் 9-ந் தேதிகளில் இரவு 10.35 மணிக்கு சிறப்பு ரெயில்கள் (07092) இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரெயில்கள் மறுநாள் மதியம் 1.30 மணிக்கு சார்லபள்ளியை சென்றடையும்.

இந்த சிறப்பு ரெயில்கள் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர் துறைமுகம், விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி, ரேணிகுண்டா, நெல்லூர் வழியாக இயக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்