உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்கள் ஆற்றில் மிதந்த விவகாரம்: வட்டாட்சியர் இடமாற்றம்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்கள் ஆற்றில் மிதந்த விவகாரத்தில் வட்டாட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.;

Update:2025-08-30 19:52 IST

சென்னை,

தமிழகம் முழுவதும் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்’ நடைபெற்று வருகிறது. இதில் பட்டா மாறுதல், ரேஷன் கார்டு, மகளிர் உரிமை தொகை உள்ளிட்டவைக்கு பொதுமக்கள் மனு கொடுத்து வருகின்றனர். இந்த மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி, சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டத்தில் பூவந்தி, கீழடி, கொந்தகை, நெல்முடிக்கரை, மடப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உங்களுடன் ‘ஸ்டாலின் திட்ட முகாம்கள்’ நடைபெற்றன.

இதில் பல ஆயிரம் பேர் மனுக்கள் கொடுத்தனர்.இந்நிலையில் நேற்று திருப்புவனம் வைகை ஆற்றில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் மனுக்கள் மிதந்தன. இதை பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். மேலும் அந்த மனுக்களில் பெரும்பாலும் பட்டா மாற்றத்துக்காக வழங்கப்பட்டவை. 

மனுக்களை ஆற்றில் தூக்கி எறிந்த சம்பவம் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துஇருந்தார். இந்த நிலையில், இந்த விவகாரத்தில் வட்டாட்சியரை இடமாற்றம் செய்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. வட்ட அலுவலகத்தில் பணியில் அலட்சியமாக இருந்ததாக 7 அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்