தண்டவாளத்தில் கற்கள், இரும்பு போல்ட்... அரக்கோணம் அருகே ரெயிலை கவிழ்க்க சதியா?
ரெயில் வருவதற்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்டதால் திருப்பதி - பாண்டிச்சேரி எக்ஸ்பிரஸ் ரெயில் தப்பியது.;
ராணிப்பேட்டை அரக்கோணம் அருகே ரெயில் தண்டவாளத்தில் கற்கள் மற்றும் இரும்பு போல்ட் வைக்கப்படிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபோல, மேல்பாக்கம் வளைவு பகுதியில் 5 இடங்களில் தண்டவாளத்தில் கற்கள், இரும்பு போல்ட் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தி வருகிறார். ரெயில் வருவதற்கு முன்னரே இந்த சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டதால் திருப்பதி - பாண்டிச்சேரி எக்ஸ்பிரஸ் ரெயில் தப்பியது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ரெயிலை கவிழ்ப்பதற்கு சதியா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை