சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சுபான்ஷு சுக்லா, மாணவர்களுடன் கலந்துரையாடல்

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேர் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தனர்.;

Update:2025-07-02 23:30 IST

சென்னை

அமெரிக்காவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் கடந்த மாதம் 25-ந்தேதி பால்கன்-9 ராக்கெட் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஏவப்பட்டது. இதில் 14 நாட்கள் அறிவியல் பயணத்திற்காக, இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேர் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தனர். அங்கு பயிர்களை விளைவிப்பது உள்ளிட்ட 7 ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் சுபான்ஷு சுக்லா ஈடுபட்டு வந்தார். இந்தநிலையில் சுபான்ஷு சுக்லா காணொலியில் பிரதமர் மோடியுடன் உரையாடினார்.

இந்தநிலையில் சுபான்ஷு சுக்லா, பள்ளி மாணவர்கள் மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) விஞ்ஞானிகளுடன் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 3.47 மணிக்கு வணிகரீதியான வானொலி தொடர்பு சேவை அளிக்கும் 'ஹாம் ரேடியோ' மூலம் பெங்களூருவின் யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்துடன் கலந்துரையாடுகிறார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள அமெச்சூர் ரேடியோ (அரிஸ்) திட்டத்தின் கீழ் இந்த தொடர்பு நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்