தமிழ் நாகரீகம் மகத்தானது; பொங்கல் விழாவில் பங்கேற்ற மத்திய மந்திரி புகழாரம்

தமிழர் திருநாளான தைப்பொங்கல் திருவிழா நாளை கொண்டாடப்பட உள்ளது.;

Update:2026-01-14 15:11 IST

தமிழர் திருநாளான தைப்பொங்கல் திருவிழா நாளை கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் விழாவையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பலர் பொங்கல் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், பொங்கல் விழா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் இன்று நடைபெற்ற பொங்கல் விழா நிகழ்ச்சியில் மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் பங்கேற்றார். பொங்கல் நிகழ்ச்சியில் தர்மேந்திர பிரதான் பேசியதாவது,

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இதேநாளில் அறுவடை திருநாளாக கொண்டாடுகின்றனர். அசாமில் பிகு, பஞ்சாப்பில் லஹோரி, குஜராத், மராட்டியம் மேற்கு மாநிலங்களில் உத்தராயம், கிழக்கு மாநிலங்களில் மகா சங்கராந்தி என கொண்டாடுகின்றனர். ஒட்டுமொத்த தென்னிந்தியாவும் பொங்கல் பண்டிகையை கொண்டாடுகிறது. தமிழ் நாகரீகம் மிகவும் மகத்தான நாகரீகம் ஆகும். இந்த புண்ணிய பூமியான தமிழ்நாட்டில் நான் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதில் மகிழ்ச்சியடைகிறேன் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்