வட்டமலைக்கரை ஓடை நீர்த்தேக்கத்தில் இருந்து 18ம் தேதி முதல் தண்ணீர் திறப்பு
6043 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது;
திருப்பூர் மாவட்டம் வட்டமலைக்கரை ஓடை நீர்த்தேக்கத்தில் இருந்து பாசனத்திற்காக வரும் 18ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நீர்வளத்துறை செயலாளர் வெளியிட்ட அறிக்கையில்,
திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம், வட்டமலைக்கரை ஓடை நீர்த்தேக்கப் பாசனப் பகுதிகளிலுள்ள 6043 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில், வட்டமலைக்கரை ஓடை நீர்த்தேக்கத்தின் இடது மற்றும் வலது பிரதானக் கால்வாய் வழியாக பாசன பயிர்களுக்காகவும், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைகளுக்காகவும் 18.01.2026 முதல் 07.02.2026 வரையிலான 20 நாட்களில், உரிய இடைவெளிவிட்டு, 10 நாட்களுக்கு 51.84 மில்லியன் கன அடிக்கு மிகாமல் (நீரிழப்பு உட்பட), வட்டமலைக்கரை ஓடை நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.