‘வடமாநில பெண்களை சமையலறையில் முடங்கி இருக்க சொல்கிறார்கள்’ - தயாநிதி மாறன்

பெண்களின் முன்னேற்றமே தமிழ்நாட்டின் முன்னேற்றம் என தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.;

Update:2026-01-14 16:13 IST

சென்னை,

சென்னையில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இயங்கும் அரசு, ‘எல்லாருக்கும் எல்லாம்’ என்ற எண்ணத்துடன் செயல்படும் திராவிட மாடல் அரசு. தமிழ்நாட்டில் உள்ள மாணவ, மாணவிகள் அரசாங்கத்தால் வழங்கப்படும் மடிக்கணினியை எடுத்துச் சென்று நேர்காணலை எதிர்கொள்ள வேண்டும் அல்லது முதுகலை பட்டப்படிப்பில் நம்பிக்கையுடன் சேர வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

தமிழ்நாட்டில் பெண்களை படிக்கச் சொல்கிறோம். ஆனால் வட இந்தியாவில் என்ன சொல்கிறார்கள்? பெண்கள் வேலைக்குச் செல்லக்கூடாது, வீட்டில் இருக்க வேண்டும், சமையலறையில் முடங்கி இருக்க வேண்டும், குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

இது தமிழ்நாடு, திராவிட நாடு. இது கலைஞர் கருணாநிதி, முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா மற்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் நிலம். இந்த மண்ணில், பெண்களின் முன்னேற்றமே தமிழ்நாட்டின் முன்னேற்றம். உலகளாவிய நிறுவனங்கள் ஏன் சென்னைக்கு வருகின்றன? ஏனென்றால், இங்குள்ள அனைவரும் தமிழில் மட்டுமல்ல, ஆங்கிலத்திலும் படித்தவர்கள்.”

இவ்வாறு தயாநிதி மாறன் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்