அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது - தமிழக அரசு எச்சரிக்கை
பணிக்கு வராமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என தமிழக அரசு எச்சரித்துள்ளது.;
அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ள நிலையில், பணிக்கு வராமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
மருத்துவ விடுப்பைத் தவிர சாதாரண விடுப்போ, மற்ற விடுப்போ அரசு ஊழியர்கள் எடுக்கக் கூடாது என்றும், காலை 10.15 மணிக்குள் பணிக்கு வராத ஊழியர்களின் விவரங்களை சேகரிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.