தொழில்நுட்பக் கோளாறு: துபாய் விமானம் சென்னையில் அவசரமாக தரையிறக்கம்

விமானத்தில் இருந்த 160 பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.;

Update:2025-10-27 15:49 IST

சென்னை,

மதுரையில் இருந்து துபாய்க்கு இன்று 160 பயணிகளுடன் தனியார் விமானம் புறப்பட்டுச் சென்றது. அந்த விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை கவனித்த விமானி, உடனடியாக சென்னை விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து அந்த விமானத்தை சென்னை விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து உடனடியாக அந்த துபாய் விமானம் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த 160 பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்ட நிலையில், விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்