தென்காசி அருகே முதியோர் இல்லத்தில் 3 பேர் பலி - திடுக்கிடும் தகவல்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 11 பேரில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-06-12 12:59 IST


தென்காசியில் தனியார் முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமையால் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உணவு ஒவ்வாமையால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 11 பேரில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த சம்பவம் தொடர்பாக காப்பக நிர்வாகி ராஜேந்திரனை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்