தென்காசி: சுரண்டை அருகே 30 கோழிகள் திருட்டு - வாலிபர் கைது

விவசாயி ஒருவர் தோட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட சண்டைக்கோழிகள் வளர்த்து வருகிறார்.;

Update:2025-07-13 20:36 IST

தென்காசி,

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே துவரங்காட்டை சேர்ந்தவர் பெருமாள். இவர் மெயின் ரோடு பகுதியில் தனக்கு சொந்தமான தோட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட சண்டைக்கோழிகள் வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு கோழிகளை கூண்டுகளில் அடைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது கோழிக்கூண்டுகள் கதவு உடைக்கப்பட்டு 30 கோழிகள் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், சுரண்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சுரண்டை அருகே உள்ள வெள்ளகாலை சேர்ந்த மாடசாமி மகன் யோகேஸ்வரன் (வயது 23) கோழிகளை திருடியது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்