”கருணை நிரம்பிய அருட்பிரகாச வள்ளலார்” - மு .க.ஸ்டாலின் பதிவு
வள்ளலாரின் பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.;
சென்னை,
வள்ளலார் பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வள்ளலார் பிறந்தநாளை முன்னிட்டு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என, பசியற்ற மனிதர்களைக் காணும் கருணை நிரம்பிய அருட்பிரகாச வள்ளலார் அவர்களின் பிறந்தநாளான இந்த தனிப்பெருங்கருணை நாள்-இல், அவர் கூறிய “மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்” என்ற உயர்ந்த நிலை அனைத்து உள்ளங்களிலும் நிலைநிற்கட்டும்!”
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.