இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தினர் கூறி வருகின்றனர்.;

Update:2026-01-10 00:58 IST

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

“கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் 1-ந்தேதிக்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியமாக ரூ.8 ஆயிரத்து 370 வழங்கப்படுகிறது. அதேசமயம் அந்த தேதிதிக்குப் பிறகு 2009-ல் நியமிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 ஆயிரத்து 200 வழங்கப்படுகிறது.

இந்த ஊதிய முரண்பாடுகளை களையக்கோரி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கத்தினர் கடந்த 15 நாட்களாகப் போராடி வருகின்றனர். இந்த ஊதிய முரண்பட்டால் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தினர் கூறி வருகின்றனர்.

எனவே போராடுகின்ற ஆசிரியர் சங்கத்தின் தலைவர்களை தமிழ்நாடு அரசு அழைத்துப் பேசி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். மேலும், போராடும் 1,400 ஆசிரியர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளையும் அரசு திரும்பப்பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்