கழக மாநாடா என வியக்கும் வகையில் நடந்தேறியிருக்கிறது தி.மு.க. பொதுக்குழு: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்
களம் 2026-ல் மகத்தான வெற்றியைப் பெற்று, ஆட்சியைத் தொடர்வோம் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.;
மதுரையில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நேற்று பிரமாண்டமாக நடந்தது. அதில் கட்சியின் நிர்வாகிகள், தலைவர்கள், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழு, கழக மாநாடா என வியக்கும் வகையில் நடந்தேறியிருக்கிறது என்று தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதல்-அமைச்சருமான மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பொதுக்குழுவா கழக மாநாடா என வியக்கும் வகையில் நடந்தேறியிருக்கிறது தி.மு.க. பொதுக்குழு 2025! கலைஞர் 102-ஐச் செம்மொழிநாள் எனக் கொண்டாடி மகிழ்ந்து, ஓரணியில் தமிழ்நாடு என கழகத்தின் வலிமையைப் பன்மடங்காக்குவோம்!
தொடர்ச்சியான பயணங்களில் உங்களைச் சந்திப்பேன்! களம் 2026-ல் மகத்தான வெற்றியைப் பெற்று, ஆட்சியைத் தொடர்வோம்!" என்று தெரிவித்துள்ளார்.