தென்காசி பஸ் விபத்தில் 6 பேர் உயிரிழந்த செய்தி மன வேதனை அளிக்கிறது; தவெக தலைவர் விஜய்
பஸ் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தவெக தலைவர் விஜய் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்;
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இன்று இரு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில், தென்காசி பஸ் விபத்தில் 6 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த மன வேதனை அளிப்பதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே தனியார் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில், பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்த செய்தி, மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் பூரணமாகக் குணமடையும் வகையில், தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்தி, உயர்தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
என தெரிவிக்கப்பட்டுள்ளது.