தவறாக மந்திரம் ஓதியது “கிளி ஜோசியர்”: தமிழக அரசு விளக்கம்

தவறாக மந்திரம் ஓதும் புரோகிதரின் காணொளி ஒன்று பகிரப்பட்டு வருகிறது.;

Update:2026-01-21 14:22 IST

சென்னை,

சமூக வலைதளங்களில் தற்போது, “அனைத்து மதத்தினவரும் அர்ச்சகர் ஆகலாம்; இந்து மத சடங்குகளை சீரழிக்கும் இந்து அறநிலைய துறை” என்று குறிப்பிட்டு தவறாக மந்திரம் ஓதும் புரோகிதரின் காணொளி ஒன்று பகிரப்பட்டு வருகிறது.

இதன் உண்மை நிலை என்ன? என்பது குறித்து தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

இது முற்றிலும் தவறான தகவல். “ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் நடைபெற்ற தை அமாவாசை சடங்கில் தவறாக மந்திரம் ஓதிய நபர் அனைத்து சாதியினர் அர்ச்சகராகலாம் திட்டத்தில் பயின்றவர் இல்லை. பழனி மலையடிவாரத்தில் கிளி ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தவர். அவர் பெயர் சுப்பிரமணியன்.

அக்னி தீர்த்தக் கரையில் இயங்கும் புரோகிதர் சங்கத்தினர் இவரைபோல் 20 நபர்களை அழைத்து வந்து பூணூல் அணிவித்து புரோகிதம் செய்ய வைத்துள்ளனர். இவருக்கும், கோயில் நிர்வாகத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று கோயில் இணை ஆணையர் விளக்கமளித்துள்ளார். வதந்தியைப் பரப்பாதீர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்