தேமுதிக யாருடன் கூட்டணி? பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
பியூஸ் கோயல் எதற்காக வந்து இருக்கிறார் என்பது தங்களுக்கு தெரியாது என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.;
சென்னை,
தமிழ்நாட்டில் ஓரிரு மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் உருவாகியுள்ள நிலையில், அதில் பாமகவின் அன்புமணி தரப்பு இணைந்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மீண்டும் இணைந்துள்ளது.கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சென்னையில் செய்தியாளர்களுடன் பேசியபோது இதனை உறுதிப்படுத்தினார். தேமுதிகவும் இந்தக் கூட்டணியில் இணையுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், தங்களுக்கு இதுவரை அழைப்பு வரவில்லை என்று பிரேமலதா கூறியுள்ளார்.
இது தொடர்பாக பிரேமலதா கூறியதாவது:
“யாருடன் கூட்டணி அமைப்பது என்பது உரிய நேரத்தில் அறிவிக்கப்படும். கூட்டணி பேச்சுவார்த்தைக்காக தற்போது வரை பாஜகவிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை. பியூஷ் கோயல் எதற்காக சென்னை வந்துள்ளார் என்பதுகூட எங்களுக்குத் தெரியாது. 24ஆம் தேதி முதல் பிப்ரவரி 2ஆம் தேதி வரை பிரசாரம் செய்ய இருக்கிறோம். கூட்டணி தொடர்பாக மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்து தெரிவிப்போம்” என்றார்.