'காலனி' என்ற சொல் பொது புழக்கத்தில் இருந்து நீக்கப்படும்: முதல்-அமைச்சர் அதிரடி

'காலனி' என்ற சொல் வசைச்சொல்லாக மாறி இருப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.;

Update:2025-04-29 11:13 IST
காலனி என்ற சொல் பொது புழக்கத்தில் இருந்து நீக்கப்படும்: முதல்-அமைச்சர் அதிரடி

சென்னை,

'காலனி' என்ற சொல் பொது புழக்கத்தில் இருந்து நீக்கப்படும் என தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது:- 

'காலனி' என்ற சொல் வசைச்சொல்லாக மாறி இருக்கிறது. ஆதிக்கம், தீண்டாமையின் அடையாளமாக உள்ள காலனி என்ற சொல் பொதுவழக்கத்தில் இருந்தும் நீக்கப்படும். அரசு ஆவணங்களில் இருந்தும் நீக்கப்படும். 'காலனி' என்ற சொல்லை நீக்க வேண்டும் என வி.சி.க. எம்.எல்.ஏ. சிந்தனை செல்வம் கோரிக்கை வைத்திருந்த நிலையில், ஆதி குடிகளை இழிவுபடுத்தும் 'காலனி' என்ற சொல் அரசு ஆவணங்களில் இருந்தும், பொதுப்புழக்கத்தில் இருந்தும் நீக்கப்படும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். .

 

Tags:    

மேலும் செய்திகள்