சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது;

Update:2025-05-26 18:32 IST

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மேற்குத்தொடர்ச்சிமலை பகுதியில் பெய்து வரும் கனமழையால் தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்