முருக பக்தர்கள் மாநாடு குறித்து திருமாவளவன் விமர்சனம் - தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி

உங்கள் மதுவிலக்கு மாநாட்டின் தீர்மானம் என்ன ஆயிற்று என தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.;

Update:2025-06-26 21:21 IST

சென்னை,

தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

மதுரையில் நடந்தது முருக பக்தர்கள் மாநாடு அல்ல மோடி பக்தர்கள் மாநாடு என்று விமர்சித்திருக்கிறார்.. சகோதரர் திருமாவளவன் அவர்கள்.. மோடி பக்தர்கள் என்றால் அவர்கள் முருக பக்தர்கள் முருக பக்தர்கள் என்றால் அவர்கள் மோடி பக்தர்கள் இதில் ஒன்றும் சந்தேகம் இல்லை... ஆனால் நீங்கள் மதுவிலக்கு மாநாடு என்று ஒன்று நடத்தினீர்களே அதில் கலந்து கொண்டவர்கள் எல்லாம் மகளிர் தவிர மற்றவர்கள் எல்லாம் உண்மையிலேயே மதுவை வில க்குபவர்களாக இருந்தால் மகிழ்ச்சியே,. மதுரை மாநாட்டு தீர்மானத்தை விமர்சித்துக் கொண்டிருக்கிறீர்களே உங்கள் மதுவிலக்கு மாநாட்டின் தீர்மானம் என்ன ஆயிற்று......

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்