திருமுல்லைவாயில்: ரசாயன ஆலையில் தீ விபத்து - பள்ளிக்கு விடுமுறை

ஆலையில் ஏற்பட்ட தீ வேகமாக பரவி வருவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.;

Update:2025-02-20 14:35 IST

திருவள்ளூர்,

சென்னைக்கு அடுத்து திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயிலில் தின்னர் ஆலை ஒன்று இயங்கி வந்தது. இந்நிலையில் இந்த ரசாயன ஆலையில் இன்று எதிர்பாராதவிதமாக தீ ஏற்பட்டது. இந்த தீயானது மளமளவென பரவி பயங்கரமாக எரியத்தொடங்கியது.

மேலும் இந்த ஆலைக்கு அருகில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வந்தது. இந்த தீ விபத்தால் அங்கு அதிக புகை மூட்டம் ஏற்பட்டது. . இதனால் அங்குள்ள மாணவர்களை ஆசிரியர்கள் உடனடியாக வெளியேற்றினர். தீவிபத்து அருகில் உள்ள பள்ளிக்கு பரவும் சூழல் ஏற்பட்டதால் இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ஆலையில் ஏற்பட்ட தீ வேகமாக பரவி வருவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்