தூத்துக்குடி: 11,237 பேர் குரூப் 2 தேர்வு எழுதினர்; 3,068 பேர் ஆப்சென்ட்
தூத்துக்குடி ஏபிசி கல்லூரியில் உள்ள தேர்வு மையத்தில் நடந்த குரூப் 2, 2A தேர்வினை மாவட்ட கலெக்டர் இளம்பகவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி II, IIA (குரூப் 2, 2A) தேர்வுகள் இன்று காலை நடைபெற்றது. தூத்துக்குடி ஏபிசி கல்லூரியில் உள்ள தேர்வு மையத்தை மாவட்ட கலெக்டர் இளம்பகவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், கோவில்பட்டி ஆகிய நான்கு வட்டங்களில் மொத்தம் 49 தேர்வு மையங்களில் தேர்வு நடைெற்றது.
தூத்துக்குடி வட்டத்தில் 24 மையங்களில் 5,904 பேர், கோவில்பட்டி வட்டத்தில் 15 மையங்களில் 3,298 பேர், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் 3 மையங்களில் 547 பேர், திருச்செந்தூர் வட்டத்தில் 7 மையங்களில் 1,578 பேர் என மொத்தம் 49 மையங்களில் 11,237 பேர் இன்று நடந்த குரூப் 2, 2A தேர்வு எழுதினர். தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 3,068 பேர் தேர்வு எழுதவில்லை.