தூத்துக்குடி: பூட்டிய வீட்டுக்குள் சிக்கிய 3 வயது சிறுவன்

தூத்துக்குடியில் பூட்டிய வீட்டிற்குள் சிக்கிய 3 வயது சிறுவனை தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பாக மீட்டனர்.;

Update:2025-05-29 21:39 IST

தூத்துக்குடி,

தூத்துக்குடி கே.வி.கே. நகர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் தாதா பீர். ஆயுதப்படை போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இன்று காலையில் தாதா பீர் பணிக்கு சென்று விட்டார். வீட்டில் அவரது மனைவி, 3வயது மகன் இருந்துள்ளனர். அவரது மனைவி வீட்டு வேலைகளை செய்துகொண்டிருந்த நிலையில், 3 வயதுசிறுவன் வீட்டிற்குள் விளையாடிக் கொண்டு இருந்துள்ளான்.

எதிர்பாராதவிதமாக வீட்டின் உள்அறைக்குள் சென்ற விளையாடிய சிறுவன் கதவை உள்பக்கமாக பூட்டி உள்ளான். பிறகு அந்த சிறுவனால் கதவை திறக்க முடியவில்லை. இதனால் சிறுவன் அறைக்குள் கதறி அழுது உள்ளான். அவனது அழுகுரல் கேட்ட தாயார் மற்றும் அக்கம்பக்கத்தினர் சிறுவனை மீட்க முயன்றனர். ஆனால் கதவை திறக்க முடியவில்லை. பதறிப்போன சிறுவனின் தாயார் மற்றும் அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் நட்டார் ஆனந்தி தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் அந்த வீட்டிற்கு விரைந்து ெசன்றனர். பின்னர் அந்த வீட்டின் கதவை உடைத்து சிறுவனை பத்திரமாக மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

 

Tags:    

மேலும் செய்திகள்