தூத்துக்குடி: கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பகுதியில் கல்லூரி மாணவி ஒருவர், அண்மையில் எழுதிய கல்லூரி தேர்வை நன்றாக எழுதவில்லை என கூறப்படுகிறது.;

Update:2025-11-15 15:40 IST

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே ஆத்திகுளம் வடக்குத் தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகள் ஸ்ரீசத்யா (வயது 17). இவர் திருநெல்வேலியில் உள்ள கல்லூரியில் பி.எஸ்சி. (கணிதம்) முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் அண்மையில் எழுதிய கல்லூரி தேர்வை நன்றாக எழுதவில்லை என கூறப்படுகிறது.

இதனால் மன வருத்தத்தில் இருந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது தாய் அளித்த புகாரின்பேரில் கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து, சடலத்தை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்