தூத்துக்குடி: பணியின்போது இறந்த காவல் அமைச்சுப்பணி அலுவலரின் வாரிசுக்கு அரசு பணியாணை- எஸ்.பி. வழங்கல்

தூத்துக்குடியில் பணியின்போது மரணமடைந்த அருணாச்சலம் மகள் ராதாவுக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க தமிழ்நாடு அரசுக்கு காவல்துறை மூலம் பரிந்துரை செய்யப்பட்டது.;

Update:2025-05-30 16:41 IST

தமிழ்நாடு சிறப்பு காவல் படை 8ம் அணியில் அலுவலக உதவியாளராக பணியாற்றிய தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அருணாச்சலம் பணியிலிருக்கும்போது மரணமடைந்தார். அவரது மகள் ராதாவுக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க தமிழ்நாடு அரசுக்கு காவல்துறை மூலம் பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி ராதாவுக்கு வரவேற்பாளர் (Recepionist) பதவிக்கு தமிழ்நாடு அரசு பணி நியமனம் செய்துள்ளது. அதற்கான பணி நியமன ஆணையை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் இன்று (30.5.2025) ராதாவுக்கு வழங்கி பணி சிறக்க வாழ்த்தினார். 

Tags:    

மேலும் செய்திகள்