தூத்துக்குடி கப்பல் கட்டும் தளங்கள் தென் தமிழக வளர்ச்சிக்கு அடித்தளம்: மு.க.ஸ்டாலின் பெருமிதம்
தூத்துக்குடியில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீட்டில் 2 வணிக கப்பல் கட்டும் தளங்கள் அமைக்கப்பட உள்ளது.;
சென்னை,
தூத்துக்குடி மாவட்டத்தில், ரூ.30 ஆயிரம் கோடி முதலீட்டில் 2 வணிக கப்பல் கட்டும் தளங்களை அமைப்பதற்காக, 2 நிறுவனங்களுடன், தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:-
”சங்க பாடல்கள் சொல்லும் கப்பல் கலையில் தமிழரின் பெருமைமிகு வரலாற்றை, இப்போது, தூத்துக்குடியில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீட்டில், 55 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் இரு கப்பல் கட்டும் தளங்கள் அமைய உள்ளன. தென் தமிழகத்தின் வளர்ச்சிக்கு புதியதொரு அடித்தளமாக இவை அமையும்.
கப்பல் கலையில் தமிழரின் பெருமைமிகு வரலாற்றை சங்க பாடல்கள் சொல்லும். உலக கப்பல் கட்டும் வரைபடத்தில் தென்தமிழகத்தில் தி.மு.க. அரசு இடம் பெற செய்கிறது. இதன் வாயிலாக வேலைவாய்ப்புகளையும் வளர்ச்சியையும் உருவாக்குகிறது.”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.