திருச்செந்தூர் கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.5¼ கோடி
திருச்செந்தூர் கோவிலில் 1.9 கிலோ தங்கம், 72 கிலோ வெள்ளியும் காணிக்கையாக கிடைத்தது.;
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை மாதந்தோறும் எண்ணப்படுகிறது. அதன்படி கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கடந்த 2 நாட்கள் நடந்தது. கோவில் தக்கார் அருள்முருகன் தலைமை தாங்கினார். இணை ஆணையர் ராமு முன்னிலையில் தன்னார்வலர்கள், கோவில் பணியாளர்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் மொத்தம் ரூ.5 கோடியே 28 லட்சத்து 4 ஆயிரத்து 38-ஐ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.மேலும் 1 கிலோ 905 கிராம் தங்கமும், 72 கிலோ 225 கிராம் வெள்ளி பொருட்களையும், 1,922 வெளிநாட்டு பண நோட்டுகளும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.