திருவள்ளூர் : போதை தலைக்கேறி சாலையில் அலப்பறை செய்த பெண் - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
போதை தலைக்கேறிய பெண் ஒருவர் பொதுமக்கள், மீது கற்களை வீசியும், லாரி முன் நின்று ஆபாச வார்த்தையில் பேசியும் அலப்பறையில் ஈடுபட்டார்.;
திருவள்ளூர்,
பொன்னேரியில் பெண் ஒருவர் போதையில் சாலையில் செல்லும் வாகனங்கள், பொதுமக்கள் மீது கற்களை வீசி ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தேரடி அருகே போதையில் இருந்த பெண் ஒருவர் "ஏத்து, ஏத்து, என் மேல ஏத்து" என கூறியவாறே சாலையில் படுத்துக்கொண்டும், லாரி முன் நின்று ஆபாச வார்த்தையில் பேசினார்.
தொடர்ந்து சாலையில் செல்லும் பொதுமக்கள், மீது கற்களை வீசினார். அந்த பெண்ணை தடுக்க முயன்ற இளைஞரிடமும் போக்கு காட்டி மீண்டும் ரகளையில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.