டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: 5வது கட்ட கலந்தாய்வு நடைபெறும் தேதி அறிவிப்பு
சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது.;
சென்னை,
2024-ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பதவிகளுக்கு நடத்தப்பட்ட முதல் மூன்று கட்ட கலந்தாய்வின் முடிவில் நிரப்பப்படாமல் மீதமுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான 5வது கட்ட கலந்தாய்வு வரும் மே 5-ம் தேதி சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், இந்த கலந்தாய்வில் கலந்துகொள்ள தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை பதிவிறக்கம் செய்ய -https://www.tnpsc.gov.in/Document/Counselling/GR_IV_01_2024_JA_TYP_STENO_PHASE_5.pdf
குரூப் 4 தேர்வின் 5வது கட்ட மூலச்சான்றிதழ்கள் மற்றும் கலந்தாய்விற்கான நாள், நேரம் மற்றும் இதர விவரங்கள் அடங்கிய அழைபபணையினை தேர்வர்கள் தேர்வாணைய இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், இந்த விவரம் குறுஞ்செய்தி (SMS) மற்றும் மின்னஞ்சல் (E-mail) மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும்.. தேர்வர்கள் மேற்படி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு குறிப்பிடப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் கலந்துகொள்ளத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.