இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-10-2025

Update:2025-10-19 09:37 IST
Live Updates - Page 5
2025-10-19 05:21 GMT

வைகை அணை நீர்மட்டம் உயர்வு: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 


வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து நீர்மட்டம் 66 அடியாக உயர்ந்தது.

2025-10-19 05:20 GMT

வடகிழக்கு பருவமழையால் ஊட்டி மலை ரெயில் பாதையில் மண்சரிவு


மண் சரிவு ஏற்பட்டதால் ஊட்டி மலை ரெயில் சேவை இன்று ஒரு நாள் ரத்து செய்யப்பட்டுள்ள


2025-10-19 05:18 GMT

புரட்டாசி மாதம் முடிந்தது: காசிமேடு சந்தையில் குவிந்த மீன் பிரியர்கள்


விடுமுறையையொட்டி காசிமேடு மீன் சந்தையில் மீன் பிரியர்கள் கூட்டம் அலைமோதியது.


2025-10-19 04:53 GMT

இந்தியா - ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி: மழையால் மீண்டும் பாதிப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருபோட்டியில் இந்திய அணி 11.5 ஓவர்களில் 37 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ரோகித் சர்மா 8 ரன்களும், சுப்மன் கில் 10 ரன்களும், விராட் கோலி (0) ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்து வெளியேறினர். தற்போது ஸ்ரேயாஸ் அய்யர் 6 ரன்னும், அக்சர் படேல் 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்க், ஹசில் வுட், எல்லீஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்நிலையில் மழை மீண்டும் குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. மழை நின்ற பின் போட்டி மீண்டும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

2025-10-19 04:33 GMT

பந்துவீச்சில் மிரட்டிய ஆஸ்திரேலியா: ரோகித், கோலி ஏமாற்றம்...இந்திய அணி தடுமாற்றம்


இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டியில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி பெர்த்தில் இன்று நடக்கிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்சேல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.


2025-10-19 04:30 GMT

தீபாவளியை முன்னிட்டு டெல்லி கடமை பாதையில் 1.5 லட்சம் விளக்குகள் ஏற்றி கொண்டாட்டம்


டெல்லி முதல் மந்திரி ரேகா குப்தா விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.


2025-10-19 04:23 GMT

2025-26 2-ம் காலாண்டில் வங்கிகள் சந்தித்த லாப-நஷ்டம் எவ்வளவு...?


2025-26 2-ம் காலாண்டில் வங்கிகள் சந்தித்த லாப-நஷ்டம் வெளியிடப்பட்டுள்ளன.


2025-10-19 04:22 GMT

ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்: கத்தார் அறிவிப்பு 


கத்தார் மற்றும் துருக்கியின் மத்தியஸ்தத்தில் தோஹாவில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.

2025-10-19 04:20 GMT

காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடைய வாய்ப்பு: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா..?


அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தீவிரமடைய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


2025-10-19 04:18 GMT

தீபாவளி விடுமுறை: சுமார் 18 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் - வெறிச்சோடிய சென்னை


தீபாவளிக்கு 3 நாட்களில் 6.15 லட்சம் பேர் அரசு பஸ்களில் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்