தவெக நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து நேர்காணல் நடத்த பனையூர் அலுவலகம் வந்தடைந்தார் விஜய்.
பஞ்சாபில் பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டியின் போது தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. போட்டியை பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள் தமிழக வீராங்கனைகள் மீது நாற்காலிகளை தூக்கி எறிந்து தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வக்பு மசோதா: நாடாளுமன்ற கூட்டுக்குழுவிலிருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட்
வக்பு மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். நிலைக்குழு தலைவருக்கு எதிராக தொடர்ந்து முழக்கம் எழுப்பியதால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கல்யாண் பானர்ஜி, முகமது ஜாவேத், ஆ. ராசா, அசாதுதீன் ஓவைசி, நசீர் ஹுசைன், மொஹிபுல்லா, முகமது அப்துல்லா, அரவிந்த் சாவந்த், நதீம்-உல் ஹக், இம்ரான் மசூத் ஆகியோர் கூட்டுக்குழுவில் இருந்து இன்று ஒருநாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
வரைவு சட்டத்தில் முன்மொழியப்பட்ட மாற்றங்களைப் படிக்க போதுமான நேரம் வழங்காமல் அவசர கதியில் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் மாநிலத்தில் மகளிர் கபடி போட்டியின்போது தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் 3 பேருக்கு தொடர்பு உள்ளதாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அறிக்கையை மனுவாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இல்லத்தில் இருந்து புறப்பட்டார் த.வெ.க தலைவர் விஜய்.
மராட்டிய மாநிலம் பந்தாரா மாவட்டத்தில் உள்ள ஆயுத தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
ஆஸ்திரேலிய ஓபன்: காயத்தால் பாதியில் வெளியேறிய ஜோகோவிச்
ஆஸ்திரேலிய ஓபன் அரையிறுதிப் போட்டியில் நோவக் ஜோகோவிச் மற்றும் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் மோதினர். முதல் செட்டை 7-6 (5) என்ற கணக்கில் இழந்த நோவக் ஜோகோவிச், காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார்.
செவ்வாய்க்கிழமை இரவு கார்லஸ் அல்கராசுக்கு எதிரான காலிறுதி போட்டியின்போது அவருக்கு இடது காலில் காயம் ஏற்பட்டது. அந்த வலி அதிகமானதால் இன்று தொடர்ந்து விளையாட முடியாமல் விலகினார்..
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சூரியன் மறைந்தால் தான் தமிழ் சமூகத்திற்கு விடிவு. பெரியார் ஒழிக என்பது எனது கோட்பாடு கிடையாது என கோவையில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
கட்சி தொடங்கிய உடன் ஆட்சிக்கு வருவோம் என்றும் கூறுகிறார்கள். வேஷமிடுபவர்கள், நாடகம் நடத்துபவர்கள் பற்றி பேச விரும்பவில்லை. திராவிட மாடல் என்று சொன்னாலே சிலருக்கு கோபம் வருகிறது. திமுக அரசின் திட்டங்களின் பலன் அனைத்து வீடுகளையும் சென்றடைந்துள்ளது. கவர்னரின் பேச்சு திமுகவை வளர்க்கிறது. கவர்னரை மாற்றாதீர்கள். இந்த கவர்னரே தொடர வேண்டும் என பிரதமர் உள்துறை மந்திரிக்கு கோரிக்கை விடுக்கிறேன் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.